எழுத்தாளர்: நா.பா.மீரா
பிரியதர்ஷினிக்கு ஒரே குஷி. நண்பன் சாம் அட்லாண்டாவிலிருந்து வருகிறான் . இருவருமே இசைப்பிரியர்கள்.
ஊம் சாக்ஸபோன் எடுத்து வருவான் வாசித்து மகிழலாம்…. தன்னிடமிருந்த புளூட்டை ஓரங்கட்டினாள்.
சாம் வந்தான் இருவரும் மாறி மாறி சாக்சபோனில் ஜாஸ் வாசித்து மகிழ்ந்தனர்.
ஏய் பிரியா கேட்க மறந்துட்டேன் உன்னோட புளூட் எங்கே?
போடா அதெல்லாம் இந்த சாக்ஸபோன்கிட்டே நெருங்க முடியுமா?
அமைதியாகப் புன்னகைத்த சாம் மனதில் ஒரு ஏக்கம் சாக்சபோன்ல சூப்பரா வாசிக்கற நமக்கு இந்த சாதாரண புளூட் காலை வரிவிடுதே?
நீயா நானான்னு பார்த்துடலாம் ப்ரியாவை வற்புறுத்தி புளூட்டை எடுத்து வரச்சொல்லி வாசிக்க பழக்கமில்லாததால் அபஸ்வரமாக ஒலித்தது.
முற்றும்.