10 வரி போட்டிக் கதை: காலம்

by admin 1
68 views

எழுத்தாளர்: நா.பா.மீரா

கடிகாரத்தில் நேரம் பார்த்த பானுதாஸ் பதறினார். ஐயோ! —நீலேஷ் விழித்துவிடுவானே —அவனுக்குக் கொடுக்கவேண்டிய மருந்துகளை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக அவன் அறையை நோக்கி ஓடினார்.அறையில் சங்கிலி கொண்டு கட்டப்பட்ட நிலையில் மகன் — விழிகள் நீர் சொரிய மிகுந்த போராட்டத்துக்குப்பின் மருந்தைப் புகட்டி விலகி வந்தார். அவர் மனத்திரையில் கடந்தகால நினைவுகள் . டாக்டர் பட்டம் பெற்று நல்ல நிலையில் இருந்த நீலேஷுக்கு எங்கிருந்துதான் கெட்ட காலம் புகுந்ததோ — சும்மாவா சொன்னார்கள் கேடு வரும் முன்னே மதி கெட்டு வரும் பின்னே 

என்று ? தந்தையை எம்மாற்றி சொத்தைப் பறித்து — கெட்ட சகவாசத்தால் இன்று போதையின் பிடியில் — காலம் மகனின் பாரத்தைத் தந்தை மேல் ஏற்றிவிட்டதோ?

முற்றும்.

10 வரி கதை போட்டியில்

கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!