எழுத்தாளர்: நா.பத்மாவதி
1. நல்ல மழை பெய்து குறையத் தொடங்க முற்றத்தில் சொட் சொட் என மழைத்துளி வடியும் சப்தம்.
2. வாசல் திண்ணையில் அமர்ந்து இருந்த அனுவும் ஆர்த்தியும் ஒரே வீட்டில் குடியிருக்கும் தோழிகள்.
3. சிறுமிகள் இருவரும் கை நீட்டி மழையை பிடித்து விளையாடி மகிழ்ந்தனர்.
4. “மழைல ஏம்மா நனையறீங்க , காய்ச்சல் வரும் உள்ள போங்கமா” என தெருவில் சென்றவர் கூறினார்.
5. “அனு அங்க பாருடி குடை” என கை நீட்டியதைப் பார்த்தவள் “ம்ம் அதுக்கென்ன நாய்க்குடை” என்றாள் அனு.
6. “பார்டா” என ஆச்சர்யமாகப் பார்த்த ஆர்த்தி” உனக்கெப்படி அது பேர் தெரியும், எங்க பாத்திருக்கே” என சரமாரியாக கேள்விகளை அடுக்க ஆரம்பித்தாள்.
7. ” இத எங்க கிராமத்துல பாட்டி வீட்டுக்கு போன போது பாத்துருக்கேன்” என்றாள் அனு
8. “ஆர்த்தி, அது மழைக் காலத்தில திடீர்னு தான் முளைக்குமாம், அதுக்கு எங்க பாட்டி ஒரு வசனமே சொல்லுவாங்க நேத்து மழைல முளைச்ச காளான்னு” என்றாள் அனு.
9.”அத தொட்டு பாக்கலாமா” என ஆர்த்தி கேட்க ” மழைல நனஞ்சா அம்மா திட்டுவா மேலும் தொட்ட நிறம் மாறி அருவெறுப்பா இருக்கும், வேணாம் தொடாதே” என சிறிது நேரத்தில் உள்ளே சென்றனர் இருவரும்.
10. தொடர்ந்த நாட்களில் வந்து வந்து பார்த்தாலும ஒருநாள் அது திடீர்னு முளைத்தது போல திடீரென காணாமல் போனதை எண்ணி ஆர்த்தியின் ஆச்சர்யத்திற்கு அளவில்லை.
முற்றும்.
10 வரி கதை போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
