10 வரி போட்டிக் கதை: குறுவட்டும் ரங்கோலியும்  

by admin 2
49 views

சிணுங்கிய மொபைல் போனை எடுத்த கவிதாவிற்கு இன்ப அதிர்ச்சி . “ வணக்கம் மேடம் ,’சாதனை சக்திகள்’ மாதப் பத்திரிகை நடத்திய நவராத்திரி ரங்கோலிப் போட்டியில் முதல் பரிசாக  “வர்ணங்கள்  சில்க்ஸ் “ வழங்கும் பட்டுப் புடவை உங்களுக்கு கிடைத்து இருக்கு ;வாழ்த்துக்கள் . வரும் சண்டே  மாலை நான்கு மணிக்கு கலை அரங்கத்தில் பரிசளிப்பு விழாவிற்கான   இன்விடேஷன் அனுப்புகிறோம்  . வெற்றி பெற்றவர்களின் ரங்கோலி போட்டோக்களும்  பேட்டியும்  அடுத்த சாதனை சக்திகள் இதழில் வெளியிட உள்ளோம் . கலர் பொடிகளோடு  சிடிக்களை பயன்படுத்திய உங்கள் வித்தியாசமான முயற்சி நடுவர்களை பெரிதும் கவர்ந்தது . சுருக்கமாக இந்த ஐடியா  பற்றி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?”

“மிக்க நன்றி ” என்று உற்சாகமாக கவிதா ஆரம்பித்தாள் . “எனக்கு தமிழ் சினிமா பாடல்கள் கேட்பது பிடித்தமான பொழுதுபோக்கு என்று தெரிந்துகொண்ட என் கணவர்   திருமணமான புதிதில் வார வாரம் ஆசையோடு   வாங்கி வந்த  சிடிக்களை  இப்போ   யூஸ் பண்ணா விட்டாலும்  சில்க் புடவையில் சுற்றி பொக்கிஷம் போல் கொலுப் பெட்டியில் பத்திரப் படுத்தி இருந்தேன் . நவராத்திரி  பொம்மைகள்  எடுக்கும் போது சிடிக்கள் கண்ணில் பட அவற்றை  பின்னணியாக வைத்து வைத்து  ரங்கோலி போடும் ஐடியா வந்தது . பரிசுப் புடவை எனக்கு ஆனால் பாராட்டுக்கள் எல்லாம் என் அன்புக் கணவர் வருணையே  சேரும் என்று சிரித்துக் கொண்டே பேட்டியை முடித்தாள் கவிதா .

நன்றி  

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/16298-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!