எழுத்தாளர்: வாசவி சாமிநாதன்
“டிங் டாங் “ காலிங் பெல் சத்தம் ஒலித்தது.
“வா, வசந்த் “ என்று அழைத்தார்
பக்கத்து வீட்டு மாமா மணி.
“அம்மா உங்களிடம் இந்த பலகாரத்தை தரச்சொன்னாங்க , அங்கிள் “ நீட்டினான் வசந்த்
“இது என்னது அங்கிள் “ என்று வசந்த் கண் வீட்டை நோட்டமிட்டப்படி கேட்டான்.
“இதுதான் சாக்ஸ் போன் “ என்றார்
மணி மகிழ்ச்சி பொங்க!
“அங்கிள் நான் இதை ஊதட்டா” என்றான் வசந்த்
அனுமதி வழங்கி அடுப்படிக்கு சென்றவருக்கு இசை ஏதும் கேட்காமலிருக்க திரும்பி பார்த்தார் .
“ஊதிவிட்டேன், தேங்க்ஸ் அங்கிள்” என்று கூறி டாடா காட்டி கிளம்பினான் வசந்த் .
வழிப்பனுப்பி விட்டு உற்றுப்பார்த்தார் மணிக்கு புரிந்தது ,
“சத்தமில்லாமல் சுத்தமானது “ சாக்ஸபோன் என்று!
முற்றும்.
