எழுத்தாளர்: உஷாராணி
உதடுகளை மட்டும் ஒரு ஓவியமாக்கித்தரச் சொன்னான் செல்வின். உலகத்திலேயே அழகான
உதடுகள். பார்வையாளர்களிடம் அவை பேச வேண்டும். கதை சொல்ல வேண்டும். இது வரை
தராத விலை பேச வேண்டும். வருவதில் பாதி உனக்கு. மீதம் எனக்கு என்றான். வரைவதற்கு
ஒப்புக்கொண்டான் விகாஷ். தினம் ஒரு கதை சொல்லும் மனைவியின் உதடுகளே மாடல்
அவனுக்கு. வண்ணப்பூச்சற்ற உயிருள்ள இதழ்கள். இதுவரை அவள் ஒப்பனை செய்து
பார்த்ததில்லை அவன். வரைந்தான். இதழ்கள் வழக்கம் போல் பேசின. எடுத்துச் சென்றான்.
“உயிரில்லையே” என்றான் செல்வின். உதடுகளில் சிவப்புத்தீட்டினான் விகாஷ். இயற்கை
இறந்தது. “இப்போது பார் எப்படி உயிரோட இருக்கு” செயற்கை விற்றது லட்சங்களுக்கு.
வீட்டில் இயற்கை அழகு காத்திருந்தது விகாஷிற்கு.
முற்றும்.