எழுத்தாளர்: உஷாராணி
அவன் தோளிலும் முதுகிலும் பிரம்மாண்டமான இரட்டைச் சிறகை விரித்துப் பறந்து
கொண்டிருந்தது அந்தக் கழுகு. அப்போதுதான் குத்தப்பட்ட அந்த டாட்டூவைக் கண்ணாடியில்
முதுகைத் திருப்பித் திருப்பிப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான் சாரனாத். ஆறு
மாதங்களுக்கு முன் வரை தினம் தவறாமல் பறந்து கொண்டிருந்தவன். பைலட் ஆக வேண்டும்
என்பது அவன் வாழ்வின் கனவு. விமானம் தரை இறங்குகிற நேரத்தில் யாரோ அனுப்பியது
போல் வந்தது அந்தக் கழுகு. விபத்தில் கால்களை இழந்தான். உயிர் பிழைத்தது உலக
அதிசயம். பறக்கின்ற உணர்வை மறக்காமலிருக்க அதே கழுகின் சிறகுகள் நிரந்தரமாக
முதுகில். கழுகினைப்போல் புதுச் சிறகுகள் முளைக்கும் வரை காத்திருப்பான். அவன் மீண்டும்
பறப்பான். செயற்கைக் கால்களுடன்.
முற்றும்.