எழுத்தாளர்: விஜயா சுப்ரமணியம்
மணி ஏழாகி விட்டதே “ அலாரம் அடித்தது கூட கேட்கலையே? ஒன்பது
மணிக்கு ஆபீஸ்ல மீட்டிங் புது கண்டுபுடிப்பை பற்றி டெமோ
பாப்கட் தலையை சிலிர்ப்பிக் கொண்டு வெள்ளை டாப்ஸும் நீல
ஜீன்ஸுமாக கூலர் கண்ணாடியை போட்டுக் கொண்டு ஸ்கூட்டியை ஒரு
உதை விட்டு பறக்க வைக்கிறாள்.
ஓட்டும் பொழுது கண்ணாடியை தலைக்கு மேல் ஆக்கி கொள்கிறாள்.
ஒரு ஸ்லிங் பாக் கோணலாக தொங்கி கொண்டு இருக்கிறது.
இரவு டெமோ எல்லாம் முடித்து விட்டு வரும் பொழுது மணி 9ஆகி விட்டது.
ஆர்மி சம்பந்தப்பட்ட விஷயம் நிறைய பேர் திருட காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
டெமோ முடித்து ஆர்மி கையில் ஒப்படைப்பது இவர்கள் பொறுப்பு.
இரவு தூங்காத களைப்பு பத்திரமாக டெமோ முடித்து ஆர்மியிடம்
ஒப்படைக்கணும் என்ற கவலையில் “சமிக்ஞை விளக்கு சிவப்பாக
இருப்பதையும் கவனிக்காமல் வண்டியை திருப்பினாள்.
எதிரே வந்த மாருதி காருடன் இடித்து கீழே விழந்தாள். கார்காரர் அவளுக்கு அடி ஒண்ணும் படலை என்று கிளம்பி விடடார்.
அவளுடைய ஸ்லிங் பாக் ஒரு மூலையில் விழுந்து இருந்தது.
வேகமாக பாகை தூக்கிண்டு வண்டியில் கிளம்பி விட்டாள்.
மீட்டிங் தொடங்கி விட்டது பாகை திறக்கிறாள்.
டம்மி டெமோவை காணவில்லை.
இப்படி திருட்டு போகும் என்று தெரிந்து தான் ஆபீஸ்லாக்கரில் வைத்து இருந்தாள்.
அருணா தங்கள் கண்டுபிடிபை“ சமிக்ஞை “ விளக்கு ஜங்ஷனில் யாராவ்து வந்து மோதுவார்கள் என்று தெரியும்.
ஆர்மியிடம் கண்டுபிடிப்பு டெமோவை வெற்றிகரமாக ஒப்படைத்தார்கள்.
முற்றும்.