எழுத்தாளர்: நா.பா.மீரா
டாக்டர் மாதவன் … டயாபடிக் கேர் கிளினிக். சுரபியின் பெற்றோர் கவலையுடன் .
பத்தே வயதான சுரபிக்கு ரத்தச் சர்க்கரை , எச்.பி.ஏ1 பதினான்கு . கண்கள் கலங்க… சரிப்படுத்திடலாமா டாக்டர் ?
நீங்க ரெண்டு பெரும் கொஞ்ச நேரம் வெளிய இருங்க.
உனக்கு என்னெல்லாம் சாப்பிடப் பிடிக்கும் சுரபி?
எனக்கு சாக்லேட் பிளேவர் கலந்த எல்லா புட் ஐட்டமும் ரொம்பப் பிடிக்கும் டாக்டர் … விட்டா மூணு வேளையும் சாப்பாட்டுக்கு பதிலாக் கூட…..கண்கள் மினுமினுக்கச் சொன்னவளை வெளியே அனுப்பி….
சுரபியின் பெற்றோரிடம் …. பிரிஸ்கிரிப்ஷன் எடுத்து —ஆறு மாதத்துக்குச் செய்ய வேண்டிய ….எக்சர்சைஸ் மற்றும் புட் சார்ட் எழுதிக் கொடுத்தனுப்பினார்.
ஆறு மாதம் கழித்து வந்த சுரபியின் எச்.பி.ஏ1 சி ஆறுக்கும் கீழே …இன்சுலின் சுரப்பும் சீராகி இருந்தது.
முற்றும்.
