எழுத்தாளர்: உஷாமுத்துராமன்
70 வயதான சுப்பம்மாவின் கடையின் சிறப்பே வடையும், அவள் தயாரிக்கும் சுவையான தேநீரும்தான். அதிலும் வயதானவர்களும்,10 வயத்திற்கு கீழே இருக்கும் குழந்தைகளும் ஏழ்மையான கோலத்தில் வந்தால் இலவசமாக வடை, தேநீர் கொடுப்பாள். அருகில் இருக்கும் அருவியில் குளித்தவர்கள் சுப்பம்மா தேநீர் கடையை தாண்டி செல்லும் பொழுது சுப்பம்மா ஆசையுடனும் அன்புடனும் உபசரிக்கும் சூடான தேநீரை குடிக்காமல் செல்லவேமாட்டார்கள். அன்று நல்ல பனி பொழிந்து கொண்டிருந்தது. ஒரு நாய் வர, அது நடுங்கியதை பார்த்து, பரிவுடன் அதற்கு சுட சுட தேநீரை ஒரு பிளேட்டில் ஊற்ற அவசர அவசரமாக குடித்து உடல் சூட்டினை பெற்றவுடனே நன்றியை காட்ட வாலை ஆடியது.’
மனிதர்களுக்கு மட்டும்தான் குளிரா? மிருகங்களுக்கும் உண்டு. இனி மிருகத்திற்கும் சூடாக தேநீர் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்த சுப்பம்மா, வாஞ்சையுடன் நாயின் தலையை தடவ அதுவும் இனி நாம் நண்பர்கள் என்பது போல அவள் காலை நக்கியது.
முற்றும்.
