எழுத்தாளர்: செல்வ சுமிதா. எஸ்
நடுராத்திரியில் பனியிலும் சுடுகிறது தேகம், இதமான காற்று கனமாகிறது. ஏனோ எனக்குள் மின்மினி பூச்சியாய் அவள் நினைவு ஒளிர்கிறது. அவளின் காதலை பெற்றதற்காக நாடு கடத்தப்பட்டவன் நான், பலத்த அவமான அடிகளுடன். ஓர் மூலையில் இருட்டான இறக்கையில்லா பெண் பட்டாம்பூச்சி நான். இறக்கையை பிய்த்து எறிந்து விட்டால் முளைக்காது என ஒடுக்கியவர்களுக்காகவே பல்லி வால் போல இறக்கையும் உள்ளூர முளைத்ததை யாரும் கவனிக்க வாய்ப்பில்லை. ஜாதியும் அந்தஸ்தும் குறுக்கே குழி தோண்டி பெரிய அணை போட்ட பிறகும் எங்கள் காதல் மலர் வாடவே இல்லை.இல்லை…இல்லை…இருவரும் வாடிப்போகவிடவில்லை.தூரத்தில் இருந்தாலும் இரு மனங்கள் அருகருகே இதோ திருகாணியில் நெருக்கிய செவ்வந்தி பூக்களாய்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
