எழுத்தாளர்: நா.பா.மீரா
முத்து ….பார்த்து எவ்வளோ வருஷங்கள் ஆச்சு எப்படி இருக்கே? குடும்பத்துல எல்லாரும் சௌக்கியம்தானே? இடைவெளி விடாமல் பேசிய மஞ்சுளாவைக் கட்டிக்கொண்டாள் முத்துலட்சுமி.
காபி ஷாப் …. உம்முகம் ஏன் இவ்வளோ வாட்டமா இருக்குடி முத்து ?
என்னத்தைச் சொல்ல .. அதிகம் படிக்காதவங்கிறதாலே புகுந்த வீட்டில என்னை மிதியடிய விடக் கேவலமாப் பார்க்கிற மாதிரி உணரறேண்டி …கண்களில் நீர் கோர்க்கப் பேசியவளை ஆதுரமாகத் தடவிக் கொடுத்து …
எல்லாமே நாம பார்க்குற பார்வைலதான்… மிதியடின்னு நீயே கேவலமாச் சொல்றியே …ஒரு வீடு சொர்க்கபுரியாவே இருந்தாலும் … அழுக்கைத் தான் எடுத்துக்கிட்டு … சுத்தம் பேணுற மிதியடிகள் இல்லாட்டி முடியுமா சொல்லு?
முத்துலட்சுமியின் விழிகள் ஒளிர்ந்தன.
முற்றும்.