எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன்
எங்கும் ஒரே இருட்டு. பக்கத்தில் இருக்கும் பொருட்கள் கூட கண்களுக்குத் தெரியாத அளவுக்கு மை இருட்டு.
தூரத்தில் நீல நிற வெளிச்சம். ஒளியைத் தேடி தானாக நகன்றது அவனது கால்கள்.
பக்கம் நெருங்க நெருங்க தெளிவாகத் தெரிந்தது அலாவுதீனின் விளக்கு போல் ஒரு மாய விளக்கு.
கண்டதும் கண்களில் மகிழ்ச்சி மின்ன வேகமாக எடுத்து தேய்த்தும் விட்டான். விளக்கை தேய்த்த மறு நொடியே உள்ளிருந்து சோம்பல் முறித்து வெளியே வந்தது ஜீனி பூதம்.
“என்ன வேண்டும்? என்று சொல்லுங்கள், உடனே தருகிறேன்” என்று பணிவாய் தலைவணங்கி நின்ற பூதத்தை கண்டதும் பெருமிதம் தோன்றியது அவனுக்கு, இதுவரை யாரும் அவனிடம் இவ்வளவு பணிவாக பேசியது இல்லையே என்றதில்.
என்ன கிடைத்தால் மகிழ்வாய் வாழலாம், என்று யோசிக்க யோசிக்க சின்ன மூளையில் எதுவும் தோன்றாமல், சிற்றின்ப ஆசையில் வேண்டினான் அழகாய் ஒரு பெண்ணை.
“தந்தேன் எஜமான்” என்று சொல்லி, உலகிலேயே அழகிய தேவதையை போன்ற ஒரு பெண்ணை அவனுக்கு கொடுத்துவிட்டு மாயமாய் மறைந்து விட்டான் ஜீனி.
அவன் மறைந்த அடுத்த நொடியே அவனுக்குள் பிடித்துக் கொண்டது கிலி. தன்னை விட அழகாய், வலிமையாய், செல்வமாய் பலர் அருகில் இருக்க, மாயமாக வந்த பெண், தன்னை விட்டுவிட்டு மாயமாக மறைந்து அவர்களுடன் சென்று விடுவாளோ? என்ற பயம்.
பயம் மிகுதியில் அட்ரினல் சுரக்க திடுக்கிட்டு விழித்தான் படுக்கையில் இருந்து. அப்பாடா, நல்ல வேலை கனவு என்று நிம்மதியாக மூச்சை விட்டான், இருந்தாலும் அந்த அழகு தேவதையை மறக்க முடியாமல், படுக்கையில் புரண்ட படி.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/