10 வரி போட்டிக் கதை: ஜோடித்தோடுகள் 

by admin 1
86 views

நினைவு தெரிந்த நாளிலிருந்து குடித்துவிட்டு என்னையும் அம்மாவையும்
அடித்ததைத் தவிர நீ என்ன செய்தாய் என்று சீறினாள் பத்மஜா. கிடைத்த
வேலையைச் செய்து எங்களையும் காப்பாற்றிக்கொண்டு, உனக்கும் குடிக்கப் பணம் கொடுத்து, நாங்கள் கஷ்டப்பட்டது போதாதா. எனக்கென ஒரு வாழ்க்கை அமைந்து இதோ ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது, இப்பொழுது தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறோம் இன்னும் எங்களிடம் என்ன வேண்டும் என வந்து இங்கே
நிற்கிறாய்.

நீ இல்லாத இந்த ஐந்து ஆண்டுகளில் தான் சற்று அமைதியாக
வாழ்ந்து வருகிறோம் அது பொறுக்கவில்லையா அவள் ஆவேசம் தொடர்ந்தது.
அப்பா என்று அழைக்கச் சொல்லிக் கெஞ்சிய குழந்தை வளர்ந்து பேசுவதைக் கேட்டுக் கொண்டே நின்றார் மாரியப்பன். கண்கள் கலங்கத் தலைகுனிந்து அந்த இடத்தை விட்டு மெதுவாக விலகி நடந்தார் பேத்திக்காக வாங்கிய ஒரு ஜோடித்தோடுகள் இருந்த அந்தப் பையை வாசலில் வைத்து விட்டு.
நன்றாக இருந்த ஒரு சிறுநீரகத்தை விற்றுத் தான் இந்தப் பணம் புரட்ட
முடிந்தது என்பதை அவளுக்கு யார் சொல்வது. போஸ்ட் மார்ட்டம் செய்யும்போது தெரிந்து கொள்ளட்டும் என்று நினைத்தவாறு படுத்திருந்த அவர் திரும்பிப் பார்த்தார்.
சத்தமாகச் சைரனோடு வந்த  ட்ரையினின் முன் சக்கரங்கள் அவரை நெருங்க அதிகபட்சம் பத்து வினாடிகள் ஆகும்

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/13578-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!