எழுத்தாளர்: ரங்கராஜன்
புதிதாக டூவீலர் வாங்கிய பரமன் அதற்கான இன்சூரன்ஸ் வாங்கி இருந்தான். அது உரிமம் முடிந்த நிலையில் அதைபுதுப்பிக்க
தன் அலுவலக ஊழியரிடம் கொடுத்து அனுப்பினான்.
ஊழியர் தாமு அலுவலகத்தில் கொடுக்க, உரிமம் புதுப்பிக்க வண்டியைக்கொண்டு காட்ட வேண்டும் என்றதும், தாமு பரமனுக்கு ப்போன் மூலமாக தகவல் சொன்னான்.
நாளை முதல் 3 நாள் இன்சூரன்ஸ் அலுவலகம் லீவு, சீக்கிரம் வாங்க, என்றதும், அலுவலகத்தில் பர்மிஷன் பெற்று இன்சூரன்ஸ் அலுவலகம் வேகமாக வர, வழியில் சமிக்ஞை விளக்கில் பச்சை வருவதற்குள் ,வேகமாக கிளம்பிய நிலையில், போக்குவரத்து காவலர்கள் துரத்திய நிலையில் இன்சூரன்ஸ் அலுவலகம் வந்து, இன்சூரன்ஸ் எடுத்ததும், வந்த காவலர்கள், பரமனிடம் தண்டத் தொகை வசூலித்தார்கள்.
பரமனின் ஞாபகமறதி காரணமாக நேர்ந்த தண்டனை இது எனவே வண்டி வைத்திருப்பவர்கள் உரிய நேரத்தில்இன்சூரன்ஸ் ,புதுப்பிக்க வேண்டும் என தெரிந்துகொண்டான் பரமன்.
முற்றும்.