எழுத்தாளர்: மிதிலா மகாதேவ்
அன்று காலையில் டிவி, ரோடியோவில் அலர்ட் நியூஸ் மாறி மாறி போட்டு கொண்டு இருந்தான்.
புயல் அதுவும் சூறாவளி எச்சரிக்கை மீனவர்கள் கடலுக்கு போக வேணாம்… அது போல மக்கள் தேவையின்றி வெளியே போக வேணாம் என்ற எச்சரிக்கை.
நான் வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்த என் மகன் ஆனந்திடம் “தம்பி சொன்னது கேட்டாய் தானே இப்போ எதற்காக வேலைக்கு கிளம்புகிற” என கேட்டேன்.
“நல்லா கேளுங்க மாமா போக வேணாம் என்று சொன்னேன் அதை கேட்காமல் கிளம்பி விட்டார் உங்க பையன்” என்றாள் என் மருமகள். யசோதா
“என்ன பா செய்வது முக்கிய புராஜெக்ட் வொர்க் அதை முடித்து இன்று மும்பை அனுப்ப வேணும் என மேனேஜர் சொல்லி விட்டார்… அது தான் சீக்கிரமாக வந்து விடுவேன் நீங்க அனைவரும் ஜாக்கிரதையாக இருங்க” என சொல்லி விட்டு கிளம்பும் மகன் எனக்கு ரவியை நினைவுபடுத்தினான்.
ரவி என் உயிர் தோழன் அந்த உறவை காக்க எனக்காக தன் உயிரை விட்டவன்…நாங்கள் ஆபிஸ் டூர் என்று காஷ்மீ்ர் போய் இருந்தோம்.
அப்போது எதி்ர் பாராத வகையில் பனி புயலில் சிக்கி கொண்டோம்… அங்கே இருந்த மீட்பு குழு பலரை காப்பாற்றி கொண்டு இருந்தது.
என் கால் எதிர்பாராத வகையில் உடைந்த வீட்டு தூண் ஒன்றில் மாட்டி கொண்டது. அதில் இருந்த என்னை காப்பாற்றிய என் ரவி மேலே பெரிய தூண் தலை மேலே விழுந்து விட்டது.
மீட்பு குழு மீட்டு ஹாஸ்பிட்டல் கொண்டு போகும் வழியில் அவன் இறந்து விட்டான்… தாய் இல்லாத அவன் மகன் தந்தையும் இழந்தான் எனக்காக உயிரை விட்ட என் நண்பன் வாரிசை குழந்தை இல்லாத நான் என் மனைவி மகனாக தத்தெடுத்து கொண்டோம்.
இன்று அவன் வளர்ந்து மனைவி, குழந்தை என வாழ்வதை பார்க்க நிறைவாக இருக்கிறது…என் நண்பன் ஆத்மா சாந்தியடையந்து இருக்கும் இன்று புயல் பற்றிய அறிவிப்பு பழசை ஞாபகப்படுத்தி விட்டது… என் மகன் கவனமாக வர வேணும் என்று நான் காத்து இருக்க ஆரம்பித்தேன்.
முற்றும்.
