எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன்
சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இருபத்தி இரண்டு வயது பெண்ணிற்கு நினைவு வந்துவிட்டது என்று மருத்துவர் கூறியதும் அங்கு விரைந்தார் அசிஸ்டெண்ட் கமிஷனர்.
ஏ. சி. பி. வரும் அளவிற்கு மிக சீரியஸான கேஸா என்று பக்கத்து ப்ளாக்கில் உள்ள செவிலிக்கு ஆர்வம். சென்னை ஏ. சி. பி நேர்மையானவர். அவரிடம் ஒரு கேஸ் வருகிறது என்றால், தவறு செய்தவன் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.
சுயநினைவு வந்த பெண்ணின் அருகில் வந்து அமர்ந்த ஏ. சி. பி. மென்மையாக அழைத்தார்.
மெதுவாக கண் திறந்த பெண்ணிடம், “நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா?” அப்பெண்ணின் நிலைமையை பார்க்கும் போது அவள் பேசவில்லை என்றாலும் பரவாயில்லை என்று தோன்றியது அவருக்கு.
அப் பெண்ணும் மெதுவாக தலையாட்டி அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறினாள்.
அப்பெண்ணிடம் ஆறுதலாக பேசிவிட்டு வெளியே வத்தவருக்கு அந்த குற்றவாளி மட்டும் கையில் கிடைக்கட்டும், அவனுக்கு மரண பயத்தை காண்பிப்பேன் என்று உருமினான்.
மருத்துவர்கள் கூறியது, கொடூரமான முறையில் கூட்டு பலாத்காரம் நடந்துள்ளதாக. ஆனால் அந்த பெண் கூறியதோ ஓரே ஒருவன் தான் தன்னை கொடுமை படுத்தியது என்று.
அவள் சொன்ன ஒரே அடையாளம் அவனது மார்பில் பெரிய அளவில் கழுகு டேட்டூ இருக்கும் என்பதே. இரண்டே நாட்களில் அந்த குற்றவாளியை கண்டுபிடித்து, சட்டத்திற்கு தெரியாது அளவிற்கு தண்டித்து, கைதும் செய்து விட்டான் ஏ. சி. பி.
மெடிக்கல் ரெப் வேலை செய்து கொண்டு இருப்பவனே குற்றவாளி. கேட்பார் இன்றி தனித்து இருக்கும் பெண்களை கடத்தி மயங்க வைத்து தன் வக்ரத்தை தீர்த்து கொலை செய்து விடுவான். இந்த பெண்ணும் இறந்து விட்டாள் என்று நினைத்து குப்பை கிடங்கில் போட்டு விட்டான்.
அவன் எதிர்பார்க்காதது, அப்பெண் உயிருடன் இருந்ததும், அவளுக்கு அவனது கழுகு டாட்டூ நினைவிருந்ததும்.
முற்றும்.