10 வரி போட்டிக் கதை: தனயன் சொல் மிக்க மந்திரம் இல்லை

by admin 1
63 views

சென்னையின் பிரதான சாலையில் சிவப்பு சமிக்ஞை விளக்கு எரிய ஊர்திகள் அனைத்தும் பச்சை சமிக்ஞைக்காக காத்திருக்க ஆரம்பித்தன.

அப்போது ஈருருளியில் மனைவி குழந்தையுடன் அந்த சாலையை வந்தடைந்த மாறன் சமிக்ஞையை மதிக்காமல் மற்ற ஊர்திகளின் ஊடே புகுந்து எதிர் சாலையை கடந்து செல்ல ஆரம்பித்தான்.


“டாடி டாடி ரெட் லைட் போட்ருகாங்களே.. நீங்க என்ன கவனிக்காமல் கிராஸ் பண்றீங்க?” என்று மாறனின் ஆறு வயது மகன் தர்ஷன் வினா தொடுத்தான்.


“அதனால் என்னடா தர்ஷ் கண்ணா? ஆப்போசிட்ல எந்த வெகிகிள்ஸூம் வரலயே.” மாறன்”டாடி ரூல்ஸ் இஸ் ரூல்ஸ்.

ஆப்போசிட்ல வெகிகிள்ஸ் வரலனாலும் நாம சாலை விதிகளை
மீறகூடாதுனு எங்க மிஸ் சொல்லி இருக்காங்க. இதனால் தான் ஆக்ஸிடென்ட் நடக்குதுனு சொல்லியிருகாங்க”
“நல்லா சொல்லுடா செல்லம். எத்தனை தடவை சொன்னாலும் இந்த மனுஷன் தான்பாட்டுக்கு போயிடுறாரு.

நான் தான் வயித்துல நெருப்பு கட்டிட்டு வர வேண்டியதா இருக்கு. கொஞ்சம் பொறுத்துதான் போனா என்ன?” என்று மாறனின் மனைவி செல்வியும் வார்த்தைகளில் கொட்டு வைத்தாள்.


“ஏண்டி நீதானே சீக்கிரமே போகனும் சொன்ன. அதோட அங்கு எந்த வெகிகிள்ஸூம் வரலபோலிஸூம் இல்லை.

உங்களை சேப்டியா தானே கூட்டிட்டு போறேன். அப்புறம் என்ன?”
மாறன்”டாடி அது அப்படி இல்லை.

ரூல்ஸ் போடுவது எதற்காக? பாதுகாப்புக்காக தானே.

எங்க மிஸ்சொல்லி கொடுத்த விஷயம் என் மனசுல ஆழமா பதிஞ்சிருக்கு.

நீங்க தான் என் ஹீரோ டாடி.


உங்களை பார்த்து தான் நாளைக்கு ஒவ்வொரு விஷயமும் நான் கத்துப்பேன்.

நீங்க இப்படி நடந்துக்கிட்டது டிஸ்ஸப்பாயிண்டா இருக்கு எனக்கு”
கன்னத்தில் அறைந்த உணர்வில் ஈருருளியை நிறுத்தியிருந்தான் மாறன்.

எதிரே சிவப்பு சமிக்ஞை விளக்கு எரிந்தது.

தனயன் சொல் மிக்க மந்திரம் இல்லை.

“இனி எப்போதும் டாடி ரூல்ஸ் பாலோ பண்வேன் ஓகேவாடா தர்ஷ் கண்ணா” என்று சொல்ல முன் இருந்த தர்ஷன் திரும்பி மாறனின் கன்னத்தில் முத்தமிட செல்வியோ மாறனின் இடுப்பில்
கைவைத்து தோளில் சாய்ந்து கொண்டாள்.

இனி அவர்களின் பயணத்தில் இன்பம் மட்டுமே.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14723-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!