10 வரி போட்டிக் கதை: தரைதட்டிய விமானம்

by admin 1
76 views

எழுத்தாளர்: கங்காதரன்

கார்த்திக் தன் மைக்கை சரி செய்தான். அப்படியே தன் உடுப்புகளை சரி.செய்து சில
முன்னேற்பாடுகளை செய்யச் சொன்னான். விமானம் கிளம்ப தயார் என அறிவித்தான். யாரும்
எதிர்பார்க்கா வேளையில் திடீரென விமானம் ஒரு குலுக்களுடன் கிளம்பியது. உள்ளே பல
போர் கருவிகள் இருக்கலாம். அல்லது படை வீரர்கள் இருக்கலாம். நமக்கென்ன இவர்களை
பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும். மெல்ல மெல்ல விமானம் மேலேறியது. காற்று
புகையாக மேகம் சூழ்ந்தது. மெல்ல மெல்ல விமானம் உயரத்தில் பறந்த போது மிக அதித
குளிரால் கார்த்திக் கீழே விழுந்தான். சத்தம் கேட்டு அவன் அப்பாவும் எழுந்தார். கார்த்தியின்
கைகளும் கால்களும் விரித்த வண்ணம் இருந்தன… ஓஹோ இன்னைக்கு பைலட் கனவா.. சரி
சரி தூங்கு என தலையை தடவி தூங்க சொன்னார். விமானத்தை ஓட்டிய கார்த்திக் விமானத்
தொடர்புகளை மீண்டும் பிடிக்க தூங்கப் போனான் கனவு தொடரும் என்ற நம்பிக்கையில்…

முற்றும்.

10 வரி கதை போட்டியில் கலந்துக்  கொண்டு வெற்றி பெறுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!