எழுத்தாளர்: நா.பா.மீரா
அறிமுக நடிகரான கதாநாயகன் , நவீன் பாபுவைச் சுற்றி பட்டாம்பூச்சிகள் கணக்காய் பெண்கள் கூட்டம் மொய்க்க
ஆட்டோகிராப் பெற்று ஒவ்வொருவராய் நகர்ந்தனர்.
கடைசியாய் அந்தக் கல்லூரிப் பெண் சார் தயங்கியபடியே விளித்தாள்-
கேள்வியுடன் நோக்கிய நவீனிடம் உங்களுக்குப் பிடித்த டிசைன் ப்ளீஸ்
அவன் முகத்தில் குழப்பத்தின் சாயல்
டாட்டூ போட்டு உங்க பெயரைப் பச்சை குத்திக்கத்தான்
நான்சென்ஸ் அவள் கையில் இருந்த ஆட்டோகிராப் புக்கை வீசி எறிந்தான் .
அந்தப் பெண் விழிகளில் நீர் நிறைந்து உறைய
நவீனின் மனக்கண்ணில் டாட்டூவிற்கு அடிமையாகி புற்று நோய் கண்டு இறந்த நண்பனின் தங்கை முகம் வந்து போனது.
முற்றும்.