எழுத்தாளர்: மைதிலி
அபூர்வாவிற்கு ஒற்றை உறவாக இருந்த அம்மாவின் மறைவுக்குப் பின் தாஸ்
தான் எல்லாமுமாக இருந்தான். உழைப்பின் உருவமாக இருந்த தாஸ் அபூர்வாவுடன் இருந்த
நேரம் அருகி அருகி அபூர்வமாகிப் போனது. அபூர்வா, தாஸ் ன் குடும்பத்திற்கு முழு நேர
வேலைக்காரியானாள். அபூர்வாவின் உடற்சோர்வையும் மனச்சோர்வையும் பகிர்ந்து
கொள்ளும் தாய்மடியானது அவள் அறையின் கழிப்பறையே,
ஆம், அவளுடைய துக்கம், தூக்கம், கோபம், வெறுப்பு அனைத்தையும் அந்த கழிப்பறையில்
போட்டு பிளஷ் பண்ணி எழும்போது அம்மாவின் அரவணைப்பில் திளைத்தாள். அபூர்வாவின்
கண்ணீர் துடைக்கும் அம்மாவின் கைகளானது கழிப்பறையில் உள்ள டிஷ்யூ பேப்பர்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/