எழுத்தாளர்: நா.பா.மீரா
சைபர் கிரைம் ஆபீஸ் ஒன்றில் வேலை பார்க்கும் மதிவாணன் … ஓய்வுக்காக கிராமத்திலிருந்த நண்பன் குமார் வீட்டுக்குச் சென்றான் .
தோப்பு அருமையா இருக்குடா குமாரு … என்னடா பிரயோசனம் மதி …அடிக்கடி தேங்காய், மாங்காய், பழமெல்லாம் திருடு போகுதே…..
மறுநாள் கிராமத்தில் ஒரே பரபரப்பு …
டேய் … இரவு நேரம் .. வானத்துல வால் நட்சத்திரம் மாதிரி தெரியுதே ..
அது என்னமோ எரிகல்லாம் ..ராத்திரியில எப்போ வேணா வெடிச்சுச்
சிதறலாமாம் . பூமியில விழுந்தா ஆளைப் பஸ்பமாக்கிடுமாம் .. ராவுல வெளிய சுத்தாம ஜாக்கிரதையா இருங்க …ஊர் மொத்தமும் இதே பேச்சு
மதியும் , குமாரும் ஒருவரையொருவர் அர்த்தத்துடன் பார்த்து
புன்னகைத்துக் கொண்டனர்.
முற்றும்.