எழுத்தாளர்: அ.தஸ்லிமா
தன் 14 வயது மகளோட நடவடிக்கை ரொம்ப வித்தியாசமா இருக்குன்னு வீட்ல எல்லாரும் சொல்றத கேட்டு நைட்டு தூக்கமே இல்லாம தவித்த சினேகா படி இறங்கி கீழே வந்தாள். அவளுடைய அப்பா சினேகா பொண்ணோட ரூம்ம வெறிச்சு பார்த்த மாதிரி ஹால்ல உட்கார்ந்திருந்தார். சினேகாவை நோக்கி அவர் பக்கத்துல இருந்த சேர்ல உட்காருமாறு
கையசைத்து சொன்னார் சினேகா பொண்ணு அவ ரூம்ல இருந்து வேகமா மின்னல் மாதிரி வெளியே வந்தாள். நேரா சினேகா கிட்ட வந்து தன் கையில ஒரு தட்டு இருக்கிற மாதிரி நினைச்சு அவளுக்கு ஒரு இல்லாத தட்ட கொடுத்து சாப்பிடுமா? என்றாள். வெடுக்கு வெடுக்கு என்று
ஒன்றுமே இல்லாம கொடுறமா சாப்பிடுற தன் மகள பார்க்க அவளோ, சினேகாகிட்ட என்ன? சாப்பிடல? நல்லாயில்லை இல்லை!! வேற கடைக்கு போலாம் என்று இழுத்தாள். சினேகா நகராம அவள தன் நோக்கி இழுக்க அவள் பொத்தென்று கீழே விழுந்தாள். உடனே தன் பொண்ணை உலுக்க அவள் மயக்கம் அடைந்தாள். சினேகா வெறி கொண்ட மாதிரி தன்
பொண்ணை உலுக்க அவள் கண் மெதுவாக திறந்தது. “நாம கண்டிப்பாக இல்லாத பட்சத்தில் நமக்கு நடக்குற தவறுகளுக்கு நாம தான் பொறுப்பு லலிதா “என்றாள். சினேகா பொண்ணு மயக்கம் அடைந்தாள்.
அதன் பிறகு சினேகா பொண்ணுக்கு இந்த பிரச்சனை வரவே இல்லை. இன்று வரை சினேகாவிற்கு புரியாத புதிர் நாம ஏன் அந்த வார்த்தைகளை சொன்னோம். யார் நம்மை திருகியது.
சினேகா பொண்ணு பெயர் பூங்கொடி
முற்றும்.
