10 வரி போட்டிக் கதை: திருத்திய காதணி

by admin 1
89 views

“கிளீச்.. கிளீச்” சத்தத்துடன் பொந்திலிருந்து வெளிவந்த சுண்டெலி
வீடெல்லாம் உல்லாசகமாக சுற்றியது .
விழா முடித்துத் திரும்பிய ஹேமாவிற்கு இரவு வெகு நேரம் ஆன
அசதியில் மேசையின் மீதி காதணியை கழட்டி வைத்துவிட்டு உறங்கி
விட்டாள் .
மேசை மீது பளபளப்பாக மின்ன ஒரு காது காதணியை கவ்விக் கொண்டு ஓட்டம் பிடித்தது சுண்டெலி.
மிகவும் உற்சாகத்துடன்” அம்மா இந்தாங்க உங்களுக்குத்தான ,
காதுல போட்டுங்க “ என்று காதணியை அம்மாவிடம் நீட்டியது .
அதே நேரம் “அம்மா நானும் உங்களுக்கு ஒன்னு கொண்டு வந்திருக்கேன்
“ என கூறி காதணியை நீட்டியது மற்றொரு சுண்டெலி .
“இரண்டும் ஒரே காதணி தான் என்றது “அம்மா எலி ஆனந்துடன் .
“பிள்ளைகளா இது நமக்கு தேவைப்படாது அது மட்டுமல்ல “
“அடுத்தவங்க பொருளை எடுக்கறது பாவம் போயி அங்கேயே வச்சுட்டு
வந்துருங்க “ என்று அறிவுரை கூறியது .

“ மன்னிச்சுங்க அம்மா , இனிமேல் இப்படி செய்ய மாட்டோம் “என்று
கூறி எடுத்த இடத்தில் வைத்துவிட்டு வந்தனர்.
“வாங்க சாப்பிடலாம் என்று அழைக்க “மூவரும் சந்தோஷமாக உணவு
அருந்தினர் .

கனவு கலைந்தது, சிரித்தப்படி
விழித்து காதணியை எடுத்து பெட்டியில் வைத்து பூட்டினாள் ஹேமா.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/13578-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!