10 வரி போட்டிக் கதை: துணுச்சாரை

by admin 1
88 views

“க்ரி..க்ர்..க்ரக்” அந்த பெரிய ஆய்வகத்தில் ரகசிய அறையிலிருந்த ஆளுயர முட்டை உடைபடும் சத்தம் தான் அது.
முழுவதும் உடைந்து அதிலிருந்து ஒரு ஜீவன் தலையை மட்டும் மெல்ல உயர்த்தி விழிகளை சுழற்றி சூழலை உணர முயற்சி செய்தது.
சத்தம் கேட்டு வெளியே இருந்து உள் நுழைந்த ஆர்க்கியாலாஜஸ்ட் ஜோன்ஸ் பிரிட்டோ வெளி வந்த ஜீவனை கண் கொள்ளா இன்ப அதிர்ச்சியுடன் பார்க்க அதுவோ அருகில் வந்து முகர்ந்து
பார்த்து உறுமியது.
உறுமலின் அதிர்வுகள் நெஞ்சை கூறுபோட உள்ளுணர்வு தந்த அபாய அலார ஒலி தப்பிச்செல் என்று உணர்த்தியது.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்களின் தொல்லுயிர் எச்சங்கள் கிடைக்க அதை ஆராய்ந்தவர் அதை பதப்படுத்தி பல்லி மற்றும் முதலையின் மூலக்கூறுகளை செலுத்தி
முட்டை உருவாக்கி இரண்டு வருட காத்திருப்பின் பலன் தான் இந்த ஜீவன்.
அந்த ஜீவன் அளவில் பெரியதும் அச்சமூட்டும் முதுகெலும்பு ஊனுன்னி டினோசர் என தெரிந்தும் தான் அந்த ஆய்வை பாதுகாப்பின்றி செய்திருக்க கூடாது என்று தாமதமாக உணர்ந்து தப்பி
செல்ல எத்தனித்தார்.
அந்தோ பரிதாபம் கண்ணாடி தடுப்புச் சுவரை சுக்கலாக உடைத்து தள்ளிய டினோசர் ஆய்வகத்தை கடந்து வெளியேறியது.
அதன் பின்னே ஓடியவர் அது நீர்நிலையை கண்டு நீரினை அருந்த சிறிது நேரத்தில் அங்கயே மடிந்து விழுந்தது.
ஜோன்ஸ் பிரிட்டோ உதவியாளர்கள் மூலம் அதனை தூக்கி கொண்டு மறுபடியும் ஆய்வில் ஈடுபட அதற்கு உணவுண்ணும் மூலக்கூறுகளை செலுத்தாமல் விட்டதன் விளைவு தண்ணீர் குடித்தவுடன் மயங்கி விழுந்தது என்று தெரிய வந்தது.
உணவின்றி அழிந்து போகும் முன் தானே அழித்து விடலாம் என்றெண்ணி மனமேயில்லாமல் ஊசியை செலுத்த போக படாரென்று கண்களை திறந்த டினோசர் அங்கிருந்து தப்பி ஓடியது.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14143-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!