எழுத்தாளர்: நா.பத்மாவதி
1. மூங்கில் இலை காடுகளே முத்து மழை மேகங்களே பூங்குருவி கூட்டங்களே வாருங்கள் என பெண்மணி அவள் கண்மணி படப் பாடலை பாடியவாறு கை கோர்ர்த்தவாறு வலம் வந்தனர் சதீஷ்ம் , சுப்ரியாவும்.
2. பல வருடக் காதல் கைகூடி இரு குடும்ப சம்மதத்தோடு திருமணமாகி ஹனிமூனில் பறக்கும் உல்லாச பறவைகள்.
3. “சுப்ரீ நம்ம லவ் பண்றப்போ நீ அடிக்கடி சொல்வ ஞாபகம் இருக்கா” என்றான் சதீஷ்.
4. “ஆமா சதீஷ் எனக்கு தேக்கடி வரணும்னு ரொம்ப ஆசை, அப்படி ஒரு எண்ணம் வந்ததே விசு படம் பாத்து தான் ” என்றாள் சுப்ரீயா.
5. “ஆமா சுப்ரீ மூங்கில் இலை காடுகளே பாட்டுல சுற்றி இருக்கும் இயற்கை எழில் சூழ் பசுமை,நடிச்சவங்க பாடினவங்க, பாடல் வரிகள்னு எல்லாமே மனசுல நின்னு போச்சு” என்றான்.
6. பசுமை எழில் கொஞ்சும் தேயிலைத் தோட்டங்களை ரசித்தவாறு கை கோர்த்து காலார நடந்தனர்.
7. படகு சவாரி சென்று அங்குள்ள மூங்கில் மரங்களடர்ந்த வனத்தில் உள்ள சுணையில் நீர் குடிக்க வரும் விலங்குகளை அருகில் கண்டனர்.
8. இயற்கை எழில் கொஞ்சும் காடு, மலை, அருவி,பூங்கா, படகு சவாரி எல்லாம் முடிந்து “சதீஷ் இந்த மூங்கில் மரங்கள்லாம் எவ்ளோ வளைஞ்சு இருக்கு பாரேன்” என்றாள் சுப்ரீயா.
9. “ஆமா இந்த மரங்கள் வளையுமே தவிர உடையாது, அது போல வாழ்க்கையில் வளைஞ்சு கொடுத்து வாழணும்னு பெரியவங்க சொல்லுவாங்க” என்றான் சதீஷ்.
10. பலநாள் ஆசை கை கூடிய சந்தோஷத்தோடு “மூங்கில் இலை காடுகளே” பாடலை முனகியபடி கை கோர்த்தவாறு சில்லென்ற வானிலையில் இளம் தம்பதிகளுக்கே உரிய நெருக்கத்தோடு அணைத்தபடி நடந்தனர் சதீஷ்ம் , சுப்ரியாவும்.
முற்றும்.