எழுத்தாளர்: சுப்புலட்சுமி சந்திரமௌலி
கணேசன் எப்பொழுதும் தலையில் தொப்பியுடனே திரிந்து கொண்டிருப்பான். படுக்கும் பொழுதும் தொப்பி இருக்கும். நீ என்ன லூசா டா எப்பவும் தொப்பியுடன் இருக்கிறாய் என்று கேட்ட நண்பன் மகேஷிடம், உனக்கு என்னடா அம்மா, அப்பா, அண்ணன் இருக்கிறார்கள். தொப்பி போடாமல் வண்டி ஓட்டியதால் (ஹெல்மெட்) என் அப்பா அம்மா இறந்தார்களாம். தொப்பியை நான் போட்டுக் கொண்டே இருந்தால், என் அப்பா அம்மாவை சாமி என்னிடம் கொடுத்துவிடும் இல்ல! என்று தன் மழலை மொழியில் கூறினான் மூணு வயது கணேசன்.
முற்றும்.