எழுத்தாளர்: தஸ்லிம்
“அம்ம எங்க இருக்கீங்க?” என்று கேட்டபடி அடுப்படிக்குள் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்த வசுந்தராவை தேடிக் கொண்டு வந்தாள் அவரின் மகள் அபிநயா.
“இங்க இருக்கீங்களா?” என்று கேட்டபடி அவர் அருகில் வர.. “வேற எங்க இருக்கப் போறேன்?” என்று வசுந்தராவின் சொல்லில் முகம் சுனங்கிய அபிநயா, இரு வினாடிகளில் முகம் பிரகாசிக்க, “இங்க பாருங்க” என்று அவரை திருப்பினாள்..
“விளையாடாத அபிநயா. அப்பா ஆஃபீஸ்க்கு போகணும். நீ காலேஜுக்கு போகணும். இந்த நேரத்துல வந்து அத பாரு இத பாருன்னு சொல்லிட்டு இருக்க லேட்டாகுது” என்று சொல்லிவிட்டு அவர் மீண்டும் திரும்பிக் கொள்ள.
“அம்மா ஒரு நிமிஷம் இங்க பாருங்க” என்று அவள் போனை காட்ட.. “அப்படி என்ன?” என்று அவர் அதைப் பார்த்ததும் அதில் ஒரு போட்டி பரிந்துரைக்கப்பட்டிருந்தது.. அதைப் பார்த்து அவள் முகம் பிரகாசித்தாலும், “இப்ப என்ன அதுக்கு?” என்ற அவர் மீண்டும் திரும்பிக் கொள்ள..
“இதுல நீங்க எழுதுங்கம்மா” என்று கேட்கவும்., “காமெடி பண்ணாம போ அபி” என்று அவர் சொல்ல.. “எனக்காக எழுதுங்கமா பிளீஸ்” என்று அவள் வற்புறுத்தி கேட்கவே.. “சரி எழுதுறேன்” என்று அவளை அப்போதைக்கு சமாளித்து அனுப்ப சொல்லி விட்டாலும்., அதற்கு பின்னாலும் அபிநயா அவரை அதை எழுத சொல்லி துரத்திக் கொண்டே இருக்க அவரும் எழுதி அதை அனுப்பினார்..
ஒரு வாரம் கழிந்த பின் அபிநயா மீண்டும், “அம்மா” என்று சந்தோஷத்துடன் ஓடி வந்து அவரை அணைத்து கொள்ள., “என்னம்மா” என்று கேட்கவும்..
“இங்க பாருங்க” என்று அலைபேசியை காட்ட அதில் வெற்றி பெற்றதற்கான லிஸ்டில் அவள் பெயரும் இருந்தது. அதைப் பார்த்ததும் ஆனந்த கண்ணீரில் மிதந்தவள் அவள் மகளை இறுக அணைத்துக் கொண்டாள்.. தண்டவாளத்தில் பூத்திருக்கும் பூ போல இந்த வெற்றி அவருக்குள் தன்னாலும் முடியும் எனும் ஆழமான நம்பிக்கையை விதைத்தது..
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
