எழுத்தாளர்: ஹரிஹர சுப்பிரமணியன்
அந்த மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் இருக்கும் ஒரே பொட்டி கடை குமார் அண்ணன் கடை மட்டும் தான் , அந்த ஊருக்கு பஸ் தினமும் பக்கத்துக்கு டவுன் இல் இருந்து காலை யில் ஒரு முறை , மாலையில் ஒரு முறை மட்டும் தான் , முருகன் தினமும் அந்த ஊரில் இருக்கும் அவனது தம்பி மூலம் வேண்டிய சாமான்களை வர வழைத்து கொள்வான் ,
கடை மூடும்போது தினசரி ஒரு வாழை பழ சீப்பை கதவை மூடிய பின்பு கதவு ஆணியில் கட்டி தொங்க விட்டு வீட்டுக்கு வந்து விடுவான் எவராவது பசி என்று இரவு வந்து திண்டாடும் சமயத்தில் வாழை பழம் அவர்கள் பசி யாற்றும் என்பது அவனது எண்ணம் எஸ்டேட் குத்தகை முடிய போவதால் ஒட்டு மொத்த மாஞ்சோலையும் காலி யாகிவிட்டால் பிழைப்பு க்கு என்ன செய்ய என்று கவலை பட ஆரம்பித்தான் முருகன் அவனது மனைவி அதற்கு கவலை படாதே மச்சான் , தினமும் முகமறியாத எவருக்கோ நீ பசியாற்றி யுள்ளாய், உன்னை ஆண்டவன் சும்மா விட மாட்டான் என்று கூறி ஆறுதல் சொல்லி தூங்க வைத்தாள்.
இந்த மாஞ்சோலை போனால் இன்னொரு பூஞ்சோலை , என்று மனதிற்குள் நினைந்து அவளும் தூக்க போனாள்.
முற்றும்.