எழுத்தாளர்: உஷாமுத்துராமன்
கான்ஸ்டபிளாக வேலை பார்த்துக் கொண்டிருந்த அகிலாவின் அப்பாவை பார்க்கும் போது அகிலாவுக்கு பெருமையாக இருக்கும் தானும் அதே போல் ஒரு போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று அப்பாவிடம் சொல்லிக் கொண்டே இருப்பாள்.
அப்பா பிரவுன் நிற பெல்ட்டு காலணி இரண்டிற்கும் பாலிஷ் போட்டுக் கொண்டு அணிந்து கொண்டு செல்லும் போது பெருமையாக இருக்கும். சிறு வயது முதல் அப்பா எப்போது அந்த பெல்டை கழட்டுவார் என்று பார்த்துக் கொண்டேயிருந்து தன்னுடைய இடுப்பில் அணிந்து கொண்டு கண்ணாடியில் பார்த்து ரசித்து நானும் போலீஸ் ஆவேன் என்று பெருமையாக சொல்லுவாள்.
அவள் கடைசி வருட பட்டப் படிப்பு படிக்கும் போது திடீரென்று அப்பா மாரடைப்பில் இறந்து விட அவளுக்கு அவருடைய வேலை கொடுக்கப்பட்டது. முதல் நாள் அப்பாவின் புகைப்படத்திற்கு முன்னால் நின்று கொண்டு காவல் சீருடை பெல்ட்டை அணிந்து கொண்டு கண்ணீருடன் அப்பாவுக்கு சல்யூட் அடித்து விட்டு வேலைக்குச் சென்றாள் அகிலா.
முற்றும்.