எழுத்தாளர்: தி.கிருஷ்ணமூர்த்தி
பாபு பள்ளியில் படிக்கும்போது பெரும்பாலான நேரங்களில் உட்கார இடமில்லாமல் நின்று கொண்டே இருப்பான்.வளர்ந்து பெரியவன் ஆனதும் திரையரங்கு சென்றால் உட்கார இடம் கிடைக்காமல் நின்று கொண்டே படம் பார்ப்பான்.ரேஷன் வாங்க சென்றால் மணிக்கணக்கில் கால் கடுக்க நிற்பான். உட்கார்ந்தால் வரிசை போய் விடுமோ என்ற பயம்.ரயிலுக்கு டிக்கெட் வாங்க போனா வரிசையில் நிற்பான்.பேருந்தில் கூட அவ்வளவு சீக்கிரம் இடம் கிடைக்காது.நின்று கொண்டே பயணத்தைத் தொடர்வான்.இப்படி காலம் முழுவதும் பெரும்பாலும் நின்று கொண்டே பயணித்தவனுக்கு ஒருநாள் நாற்காலி கிடைத்தது.எப்படி தெரியுமா?வயது மூப்பு காரணமாக இறந்தவனை இறுதி சடங்கின்போது நாற்காலியில் அமர வைத்து குளிப்பாட்டினார்கள்.உயிர் பிரிந்ததும் சிவலோக “பதவி”-யும் சேர்த்து கிடைத்தது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
