எழுத்தாளர்: நா.பா.மீரா
அண்ணா சாலை — சேகர் அவசரமாகச் சாலையைக் கடப்பதற்குள் சிவப்பு சிக்னல் விழ —சே .. இன்னும் அரைமணி நேரமாச்சும் ஆயிடும் —- கார்க் கண்ணாடி இறக்கி வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.
ஒரு சிறுமி கார் துடைக்கும் துணிகளுடன் —ஒவ்வொரு கண்ணாடியாய் தட்ட–
படிக்கிற வயசுல இப்படி —
கோபமாகக் குரல் வந்த திசையில் நோக்கினான் சேகர்…
சும்மா ஏன் தட்டிகிட்டே இருக்கே … நேத்துதானே வாங்கினேன்…கண்ணாடியை இறக்கிவிட்டு கத்திக்கொண்டிருந்தவரிடம் நிதானமாக…..
நேத்து, அவசரத்துல பாக்கி வாங்காம …. சிக்னல் விழுந்தவுடனே வண்டிய எடுத்திட்டீங்க ….இந்தாங்க சார் … ஐம்பது ரூபாயை நீட்ட…
சேகர் பிரமித்தான் . பச்சை சிக்னல் விழுந்தது.
முற்றும்.