10 வரி போட்டிக் கதை: நில்! கவனி! செல்!

by admin 1
34 views

“ அழாதே தம்பி அப்பா வருகிற நேரம்

கண்ணத் தொட  ,அப்பாவுக்கு பிடிக்காதது தம்பி “   என்று மகனுக்கு ஆறுதல் கூறினாள் “ ஹேமா .

கரகரப்பு சத்தத்துடன் உள்ளே நுழையும் போதே அரைகண் பார்வையால் மகன் மணியை கவனித்தான் வசந்த்

“  உன் மகனுக்கு என்னவா பொம்பள பிள்ளை மாதிரி அழுகிறான்    “என்றான் கணத்த குரலில் வசந்த்

 “ நேத்து நடந்த விளையாட்டு போட்டியில தோத்துத்திட்டான்

அதுதான்  “ என்றால் ஹேமா

“  மணி இங்க வாடா “  என்று மெல்லிய குரலில்  அழைத்தான் வசந்த்

“  எல்லா நேரமும் பச்சை விளக்கு எரியாது ; அப்ப அப்ப சிகப்பு விளக்கு எரியும் சில நேரங்களில் மஞ்சள் நிறத்திலேயும் எரியும்  “  என்றான் வசந்த்

“ , தம்பி சிக்னல் இருக்கிறப்ப எந்த விளக்குக்கு என்ன மாதிரி செயல்படுகிறோமோ

அது மாதிரி தான் வாழ்க்கை. “ என்றான் வசந்த்

  “ சிகப்பு விளக்கு போட்டா நம் செயல்பாட்டை நிறுத்தி வைச்சிட்டு

பச்சை விழும் வரை காத்திருக்குனும்

ஏ! மஞ்சள் விளக்கு வந்தா மிக கவனமாக கவனசிச்சு செயல்படனும் அப்பதான் வாழ்க்கை இனிமையாக இருக்கும்  “ என்றான் வசந்த்

“  வண்டி ஓட்டும் போது மட்டும இந்த ரூல வாழ்க்கையிலும் கடைப்பிடிச்சா நாம வெற்றி பாதை அடைய முடியும்

சரியா  “என்றான் வசந்த்

மணிக்கு தெளிவு பிறந்த சந்தோஷத்தில் அப்பாவை

கட்டி பிடித்துக் கொண்டான் மணி

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14723-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!