எழுத்தாளர்: சுப்புலட்சுமி சந்திரமௌலி
சுகந்தி தன் அம்மா கமலாவிடம் நான் எவ்வளவு நாட்களாக நீர்வீழ்ச்சிக்கு அழைத்துப் போகச் சொல்லி கேட்கிறேன் என்றாள். இந்த வாரம் உன் அப்பாவிடம் சொல்கிறேன், கண்டிப்பாக போகலாம் என்றாள். தன் கணவன் ரகுவிடம் இது பற்றி கூறினாள். நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். சுகந்தி தண்ணீரைப் பார்த்த சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்டு ஸ்டேட்டஸ் போட விரும்பி செல்பி எடுக்கும்போது வேகமாக வந்த நீர் சுகந்தியை அடித்துச் சென்றது. அங்குள்ள இளம் பெண் சற்றும் தாமதிக்காமல் நீச்சல் அடித்து சுகந்தியின் தலைமுடியை பிடித்து இழுத்து வந்தாள். அப்பெண்ணுக்கு நன்றி சொல்லிய கமலா ஊர் திரும்பியதும், சுகந்தியை நீச்சல் வகுப்பில் சேர்த்தாள்.
முற்றும்.