எழுத்தாளர்: மு.லதா
“சாரு, என்னஅப்படி இமைக்காமப்பாக்கற?”
இல்ல, நீதானா இதச்சொல்றன்னு
பாக்கறேன்! “சாட்சாத் நானேதான்”
அப்படிப் பாக்காதடி,உன்னப்பாத்தா,
நம்ம தலைவரோட “நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது” ன்னு பாடணும்போல இருக்கு. “அப்பா, என்ன கண்ணுடி!”
என்று வியந்தபடி கைக்குட்டையால்
அவளது வியர்வைத்துளிகளை மென்மையாக ஒற்றியெடுத்தான் சங்கர்.”சாரும்மா, நீ இன்னும் என்ன நம்பலயா?நிஜமாத்தான் சொல்றேன்,நாம இந்தியாவுக்குப்
போறோம்.உன் ஆசைப்படி நம்ம குழந்தையோட ஜனனமே அங்கதான்.நம்ம குழந்தை நம்ம கலாச்சாரத்தோட நம்ம மண்ணுலதான் வளரப்போறது.சந்தோஷமா?வேண்டிய ஏற்பாடெல்லாம் தொடங்கியாச்சு ஓக்கேயா?, கொஞ்சம் சிரியேண்டி என் நீலக்கண்ணி” என்றான் சங்கர்.”தாங்ஸ்பா” என்றபடி சங்கரின்
தோளில் சாய்ந்தாள் சாருமதி.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/