எழுத்தாளர்: உஷா ராணி
எங்கேர்ந்துடா இந்த விளக்கை எடுத்த “ என்று ரிஷி, அவனது நண்பன்
பிரியனிடம் கேட்டான்.
“ஓர் 100 வயது கிழவர் கொடுத்தார். “
“ இது அலாவுதீன் விளக்காடா … தேய்த்தால் பூதம் வருமா , பயமா
இருக்கு டா
‘“ ஆமாம். வாடா . தேய்த்து பார்க்கலாம்..
“ நல்ல பூதம்டா. நமக்கு அடிமையா இருக்கும். கேட்டது எல்லாம்
கொடுக்கும். இங்க தேய்க்க முடியாது. இராத்திரி கடற்கரைக்கு போய்
விளக்கை தேய்க்கலாம்.
பயத்தில் கண்களை மூடிக் கொண்டு தேய்த்தார்கள்.
கண்களை திறந்து பார்த்தால், ஓர் அழகிய பெண் ஒய்யாரமாக
நடந்து வந்தாள்.
“ டேய் … பூதம் வரும் என்று பார்த்தால் இவ வருகிறாள். நாம தான்டா
அவளுக்கு அடிமையா இருக்கணும். “ என்று அந்த இடத்தை விட்டு
ஓடினார்கள்.
கடற்கரையில் குளித்துவிட்டு வந்த பெண் முழித்தாள்.
இவர்கள் ஏன் என்னைப் பார்த்து ஓடுகிறார்கள்.
அந்த விளக்கில் இருந்த பூதம் அவளை பார்த்து சிரித்துக் கொண்டது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/