எழுத்தாளர்: அப்புசிவா
கடும் பிரயத்தனங்களுடன் காடுகளை கடந்தேன்.
எதிர்கொண்ட மலைகளும் நதிகளும் எண்ணிலடங்கா.
கிடைத்த வரைபடம் சுற்றிச்சுற்றி அலையவைத்தது.
காலம் நேரம் மறந்துபோனது.
சவரம் செய்யா முகத்தில் நீண்ட தாடி.
உண்டு பலகாலம் ஆனதாக உடல்.
கிழிந்து நைந்த உடைகள்.
ஒருவழியாக கண்டறிந்தேன், அலாவுதீனின் அற்புத விளக்கை
அதை தேய்க்கும் முன் அவளைக்கண்டேன்.
விளக்கை தள்ளிவைத்துவிட்டு அவளை நெருங்கினேன்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
