எழுத்தாளர்: அனுஷாடேவிட்
“அம்மா ரீனா என் பிஸ்கட்டை பிடுங்கிட்டா”
“இல்லைம்மா ரீகன் தான் பஸ்ட் பிடுங்கி சாப்பிட்டான்”
“வாண்டுகளா எப்ப பார்த்தாலும் ஏன் இப்படி அடிச்சிக்கிறீங்க? ஒருத்தர்கொருத்தர் விட்டு கொடுத்து ஷேர் பண்ணி சாப்பிடுங்க”
மறுநாள் பள்ளியில் வாண்டுகளின் வகுப்பு தோழி கிருபா அழுதுகொண்டிருந்தாள். ஏனென்று கேட்க “என்கிட்ட நிறைய க்ரீம் பிஸ்கட் இருக்கு. எனக்கு சிஸ்டர் பிரதர்னு யாரும் இல்லை. யார் கிட்டே
ஷேர் பண்வேன் நான்?”
“ஓ இவ்வளவு தானா விஷயம். இனிமே ரீனா தான் உனக்கு சிஸ்டர் நான் தான் உனக்கு பிரதர் ஓகேவா”
“ஆனால் நீங்களே சண்டை போட்டுப்பீங்களே? நான் அன்பை மட்டும் தான் ஷேர் பண்ண நினைக்கிறேன்”
“இல்லை இனிமே நாங்க எப்போதும் சண்டை போட மாட்டோம். ஷேர் பண்ணி சாப்பிடுவோம்.
ஆமாதானே ரீகன்” ரீனா வினவ ரீகன் ஆமோதித்தான்.
“ஓகே இந்தாங்க பிஸ்கட்” என்று கிருபா கொடுக்க இருவரும் வாங்கி ருசித்து விளையாடினர்.
மூன்றாம் வகுப்பு மாணவர்களின் இடை வேளை நேரம் முடிய இன்னட்டு பிஸ்கட்கள் இனிமையாய் மூவரின் வயிற்றையும் மனதினையும் நிறைத்தது.
முற்றும்.