எழுத்தாளர்: நா.பா.மீரா
பாற்கடலில் அமிர்தம் கடைந்து ….களைத்து ஓய்வில் இருந்த திருமால் …
மகா…. அதோ பூலோகத்தில் சாதாரணக் கிளிஞ்சலை வலம்புரிச் சங்கு என்று எண்ணி வழிபடுகிறாளே அந்தக் குழந்தை … வித்தியாசம் உணர்த்தலாமா ?
அதே சமயம்…. ஏய் தாமரை ….நம்ம பொண்ணுதான் அரைப் பைத்தியம் மாதிரி சாதாரணக் கிளிஞ்சலை வைச்சு பூஜை பண்ணிக்கிட்டிருக்குன்னா ….நீயாவது எடுத்துச் சொல்லக்கூடாதா?
அதே சமயம்…. என்ன தேவைக்கு? அவளோட பக்தி மட்டும்தான் என் கண்ணுக்குத் தெரியறது…. பெரியவளானாத் தானாப் புரிஞ்சிக்குவா ….
பெற்றோர் பேசியதைச் செவியுறாது தன் பாட்டுக்கு பூஜை செய்து கொண்டிருந்தாள் . திருமாலைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தாள் திருமகள்.
முற்றும்.