எழுத்தாளர்: வினோத் சிங்
பள்ளிக்கூடம் முடிந்து வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்த மலருக்கு டீச்சர் சொன்ன சிண்ட்ரெல்லா கதை ஏனோ மனதிற்குள் பதிந்து விட்டது…!
மலரின் அப்பாவும் அம்மாவும் சாலை பணியாளர்களாக வேலை செய்பவர்கள், வீட்டில் சொல்லும்படியான எந்த ஒரு சுகபோகமும் இல்லை!
அவர்களின் சாப்பாடு என்பது அரசாங்கம் தரும் அரிசியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது!
இன்று டீச்சர் சொன்ன சிண்ட்ரெல்லா கதையை தன் தோழி சுமதியிடம் கூறிக்கொண்டும், சந்தேகத்தைக் கேட்டுக் கொண்டும் நடந்து வந்து கொண்டிருந்தாள் மலர்!
“சுமதி அந்த செருப்பு ஒருவேளை எனக்கு கிடைச்சு நான் அதை என்னுடைய காலில் மாட்டிக்கிட்டாள் நானும் இளவரசி தானே என கேட்டாள்…. மலர்!
இப்படி ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டிருந்த மலர்…. அவள் வீட்டை நெருங்கி வீட்டிற்கு உள்ளே சென்றால் அடுப்படியில் மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை எடுத்துப் பார்க்க….அரசாங்க அரிசியில் வெந்த சோறு இருந்தது…!
தினமும் இதே பார்த்த மலர் எரிச்சலுடன் வீட்டுக்கு பின்புறம் செல்ல அங்கே ஒரு பழைய பெரிய செருப்பு ஒன்று இருந்தது!
அழுக்கடைந்த அந்த செருப்பை தண்ணீரில் நனைத்து சுத்தம் செய்து சிண்ட்ரெல்லா செருப்பாக நினைத்துக் கொண்டு அதை காலில் மாட்டி அவள் வீட்டின் பின்புறம் பசியுடன் ஒரு இளவரசியாக தன்னைத்தானே நினைத்துக் கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தாள் மலர்!
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
