10 வரி போட்டிக் கதை: பச்சை விளக்கு

by admin 1
43 views

மூன்று வருடங்களாக உயிருக்கு உயிராய் காதலித்த காதலி இன்று திருமண பத்திரிகையை கொடுத்து விட்டு, உன் தங்கை திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைத்து, அதன் பிறகு லோன் வாங்கி, வீடு கட்டி, செட்டில் ஆகும் வரை என்னால் உனக்காக காத்திருக்க முடியாது. 

என் அப்பா பார்த்திருக்கும் மாப்பிள்ளை, செட்டில் ஆனவர். அதுமட்டுமின்றி வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். என்னையும் கூட்டிக்கொண்டு போய்விருவார். அதனால் தயவுசெய்து என்னை என் போக்கில் விட்டுவிடு. 

உண்மை காதல் அது இது என்று சொல்லி என்னை தொந்தரவு செய்யாமல், நான் வெளிநாடு செல்லும் வரை என் கண் முன்னே வந்து விடாதே என்று சொல்லி விட்டு சென்றுவிட்டாள். 

அவள் சென்று அரைமணி நேரம் அசையாமல் ஒரு இடத்தில் நிற்றிருந்தவனுக்கு இன்னும் ஏன்? நான்  உயிருடன் இருக்க வேண்டும் என்று நினைப்பே மீண்டும் மீண்டும் தோன்றியது. 

வாழ்க்கையே வெறுத்துப் போய் தன் வண்டியை எடுத்துக்கொண்டு கண்மண் தெரியாமல் வேகமாக வந்தவனை தடுத்து நிறுத்தியது சிகப்பு நிற டிராபிக் விளக்கு. 

சிகப்பு விளக்கு ஒளிர்ந்ததும் 120 நொடி என்று எண்களையும் பக்கத்தில் டிஜிட்டல் போர்டு காண்பிக்க, தன் வண்டியை முறுக்கிக்கொண்டு இருந்தான். சிகப்பு விளக்கு போலவே அவனது உள்ளமும் தனலாய் எரிந்து கொண்டிருந்தது. 

இன்னும் இரண்டு நிமிடம் இருக்க, இவன் ஏன்? இப்படி வண்டியை முறுக்கி கொண்டிருக்கின்றான் என்று, அக்கம் பக்கம் உள்ளவர்களின் பார்வையும் முழுவதும் அவனின் மேலேயே இருக்க, அவனுக்கு முன்னாள் நின்ற பைக்கில் இருந்த பொக்கை வாய்க் குழந்தையும் அவன் வண்டியின் சத்தத்தை கேட்டு அவனைப் பார்த்து சிரித்தது.

திடீரென்று கேட்ட குழந்தையின் சத்தத்தில் நிமிர்ந்து அக்குழந்தையை பார்க்க, அம்மழலைச் சிரிப்பில் அவன் மயங்கி விட்டான். அவனது கோபமும் எதிரில் தெரியும் டிஜிட்டல் நொடிகள் போல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. 

அக்குழந்தையைப் பார்த்ததும் மருமகள், அதாவது தன் தங்கையின் குழந்தை ஞாபகத்திற்கு வர! தன்னால் அவனது உதடு புன்னகைத்தது.  

அவன் புன்னகைத்ததும் குழந்தை மேலும் சிரித்து கையை காட்ட, கொஞ்சம் கொஞ்சமாக கோபம் தணிந்து வண்டியின் சீற்றத்தை குறைத்தான். 

சிகப்பு விளக்கு மாறி மஞ்சள் விளக்கு ஒளிர்ந்ததும், குழந்தைக்கு டாட்டா காண்பிக்க, அதுவும் தன் பொக்கை வாயை காண்பித்து சிரித்து டாட்டா காண்பித்தது. 

மனது அமைதியானதும், தனக்காக வாழும் தாயையும், தன் மீது பாசம் வைத்திருக்கும் தங்கையையும் விட்டுவிட்டு, என் அன்பை புரிந்து கொள்ளாமல், பணத்தின் மீது மதிப்பு வைத்து என் காதலை மறுத்தவளுக்காக உயிரை விட நினைத்ததை எண்ணி வருந்தினான். 

அடுத்து சில நொடிகளில் பச்சை விளக்கு ஒளிர, குழந்தை இருந்த வண்டி நேராக பயணிக்க, இனிமேல் என் வாழ்க்கை பயணம் சரியாக இருக்க வேண்டும் என்று நினைத்து தன் வண்டியை வலது பக்கம் (ரைட் சைடு) திருப்பினான் தன் தங்கையின் வீட்டை நோக்கி. 

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14723-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!