10 வரி போட்டிக் கதை: பட் பட்டென்று  வெடித்த பஜ்ஜி

by admin 1
80 views

மிருதுளா திருமணமாகி புகுந்த வீட்டு வந்தபோதுதான் மாமியாரிடம் சமையல் கற்றுக் கொண்டாள் அம்மா வீட்டில்  இருக்கும்போதும் கொஞ்சம் சமையல் செய்து  இருந்தாலும் மாமியார் வீட்டு பழக்கங்கள் தெரிய வேண்டும் என்று பொறுமையாக கற்றுக் கொண்டாள்.

காலை வேலைக்கு சென்றாலும் முடிந்தவரை மாமியாருக்கு சமையலில் உதவி செய்துவிட்டு தான் செல்வாள். அன்று வீட்டிலிருந்து வேலை செய்யும் ஒரு வாய்ப்பு  கிடைத்தது.  மிருதுளாவின் மாமியார் கடைக்கி சென்று வருவதாக சென்றுவிட்டார்.

மாமியார் இல்லாமல் அடுப்பில்   எந்த வித ஒரு சமையலும் செய்ததில்லை அன்று மாமியார் வருவதற்குள் திடீரென்று பஜ்ஜி செய்து அவர்களை அசத்த வேண்டும் என்று மாமியார் வருவதாக போன் செய்த உடன் பஜ்ஜி செய்வதற்கான மாவு தயாரித்து  எண்ணை வைத்து உருளைக்கிழங்கு வெங்காயம் இவற்றை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும் பட் பட்டென்று  வெடிக்கவும் வாசலில் மாமியார் கதவைத் தட்டவும் சரியாக இருந்தது உள்ளே வந்த மாமியார் பயந்து போய் என்னவென்று கேட்க “அம்மா நீங்கள் வருவதற்குள் பஜ்ஜி செய்ய முயற்சி செய்தேன்” என்று சொல்லி பஜ்ஜி மாவை காட்ட மாமியார்  “ஐயோ காலையில் நான் கோலம் போடுவதற்காக எடுத்த அம்மாவை அரிசி மாவு வைக்கும் இடத்தில் மாற்றி வைத்து விட்டேன்.

நீ கோலமாவு கடலை மாவையும் கலந்து பஜ்ஜி செய்திருக்கிறாய் அதனால் தான் இப்படி வெடிக்கிறது. பரவாயில்லை முதல் முயற்சி தானே பயப்படாதே” என்று மாமியார் ஊக்கத்துடன் சொல்ல மாமியாருக்கு பஜ்ஜி செய்து கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் செய்ததாக கண்ணில் கண்ணீருடன் மாமியாரை அணைத்துக் கொண்டாள் மிருதுளா.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14143-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!