எழுத்தாளர்: சுகந்தி குமார்
  ரம்யமான பனி பெய்யும் மார்கழி மாதக் காலை நேரம்.     தோப்பு பக்கத்து வீடு என்பதால் கூடுதல் பனி.
        வீட்டு   வாசலில்  அழகான பெரிய கோலம்     போட்டுக்    கொண்டு இருக்கிறாள்    ரம்யா.
       ” கொட்டுகிற பனியில் இவ்வளவு பெரிய கோலம் எதுக்கம்மா, சின்னதாக போடக் கூடாதா? ” ரம்யாவின்.  தாயார் .
        “”மார்கழி   மாதக்   கோலப்    போட்டிக்காக   போடுகிறேன்     அம்மா.    காலை  நேரப்   பனி  காலத்தில்    போடும்     கோலத்திற்கு    தனி  அழகு    அம்மா.”
          ” போன வருடமும் தானே சில மார்கழி மாதக் கோலப் போட்டிக்காக கோலங்கள் போட்டாயே  பரிசு எதுவும் கிடைத்ததாக தெரியவில்லையே”
          ” என்னம்மா நீ,   கஜனி     முகம்மதே 18 வது முறை தான் போரில் வெற்றி பெற்றதை படித்து இருப்பீங்களே அம்மா ,  இந்த முறை   எனக்கு  நிச்சயமாக பரிசு கிடைக்கும் , அந்த அளவுக்கு   நல்ல டிசைன் பண்ணி போட்டு இருக்கிறேன் “.
         ” பரிசு கிடைக்கிறதோ இல்லையோ மார்கழி மாதம் அதிக காலையில் அதிக அளவு உற்பத்தி ஆகும் பிராண வாயு நிச்சயமாக கிடைக்கும் “
          ஆண்கள் பஜனை பாடல்கள் பாடிக்கொண்டு வருகிறார்கள். ”  அம்மா,  ஆண்களுக்கும் பிராண வாயு அதிக அளவில் கிடைக்கத் தான் இந்த  மார்கழி பஜனையா ! நம் முன்னோர்கள் பெரிய விஞ்ஞானிகள் தான் “.
        ஒரு    மாதம்.   கழித்து     ரம்யாவுக்கு    மூன்று  பார்சல்கள்   வந்தன. ரம்யாவுக்கு    ஒரே   மகிழ்ச்சி.
       “அம்மா, அம்மா இதோ பாருங்கள் அம்மா எனக்கு மூன்று கோலப் போட்டிகளிலும் முதல் பரிசு கிடைத்து இருக்கிறது.   முயற்சி.   திருவினை ஆக்கும் .  தானே   “.
முற்றும்.

 
