10 வரி போட்டிக் கதை: பனி தூறும் காலம் 

by admin 1
36 views

எழுத்தாளர்: எஸ். முத்துக்குமார் 

உருண்டு உருண்டு எங்கோ ஓடி விட்டது என்னுடைய பச்சைக்  கலர் பந்து..ரொம்ப தூரம் வந்து விட்டேன். வழியில் மரத்தடியில் …குனிந்து பார்த்தபோது கீழே விழுந்து பனியன் முழுவதும் மண்.  பனி தூர ஆரம்பித்து விட்டது. கால்கள் நடக்க முடியாமல் ஆடின…காதும் மூக்கும் சில்லிட்டு போக, கைகளை குறுக்காக மார்பில் போட்டு அண்ணாந்து பார்த்தேன்..மரத்திலிருந்து சொட் சொட்டென்று முகத்தில் விழும் நீர்த்துளிகள்..வீடு சேருமுன் முழுதுமாக நனைந்திருந்தேன்….வாசலில் கவலையோடு அம்மா… என்னை இழுத்துப் பிடித்து, பனியனைக் கழற்றி, முந்தானையால் என் தலையைத் துவட்ட ஆரம்பித்தாள்.  நான் நடுங்கும் குரலில்,”அம்மா,  செடி மரம் எல்லாமே என்னை மாதிரி நனைஞ்சு போச்சுமா..என்னோட பந்தும் நனைஞ்சிருக்கும்… அதுக்கெல்லாம் யாரு துவட்டி விடுவாங்க..”அம்மாவின் அணைப்பில் எனக்கு குளிரே தெரியவில்லை.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/12351-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க: 

https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!