எழுத்தாளர்: திவா இராஜேந்திரன்
கடும் பனிபொழிவில் காஸ்மீரின் எல்லையில் காவலுக்கு நின்றிருந்த ராணுவ
வீரன் அங்கே பூத்திருக்கும் பன்னீர் ததும்பும் ரோஜாவை லேசாக தடவி
பார்க்கும் போதெல்லாம் தன் மனைவியின் இதழ் நியாபகத்துக்கு வரும்
சங்கருக்கு, அன்று இரண்டு நாட்களுக்கு முன்பு பிறந்திருந்த தன் மகனின்
வாய் மலராய் முன் நின்றது. அவசர விடுமுறையில் செல்லவிருந்தவனுக்கு
சற்றும் எதிர்பாராத தாக்குதல். திருப்பி தாக்கி அனைவரையும்
கொன்றிருந்தாலும் எதிரியின் ஒரு தோட்டா அவனின் உயிரை அவசர
விடுமுறையில் இருந்து விடுவித்து நிரந்தர விடுமுறைக்கு
அழைத்துச்சென்றது. தேசியக்கொடி போர்த்தி வந்த சவப்பெட்டியை பார்த்து
அவன் இதழ் சுவைத்திருந்த மனைவியின் இதழ் நீர் இபோது அவளின்
கண்ணீராய் வர, சொல் அறியா குழந்தையும் அழு குரலில் கத்தியது “வீர
வணக்கம்” என்று.
முற்றும்.
