எழுத்தாளர்: நா.பத்மாவதி
1. “ஏய் ரமா ரமா” என உரக்க அழைத்தபடி நுழைந்தாள் உமா.
2. ” வா வா உமா”, என சிரித்தபடி வந்த ரமா “ஏன் கத்தறே உள்ளே வா, சொல்லு என்ன விஷயம்” என்றாள்.
3. “இன்னிக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்கா” என்ற உமாவிடம் “அதெப்படி மறக்க முடியும்,நல்லா நினைவு இருக்கு” என்றாள் ரமா.
4. இருவரும் சகோதரிகள் அம்மா இல்லை, அப்பா அருகிலேயே தனியாக வசித்தாலும் நாள் தவறாது மாலை நேரத்தில் வந்து பார்ப்பது வழக்கம்.
5. இன்று அவருக்கு 63வது பிறந்தநாள் மாலை வந்தால் அவருக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என இருவரும் பேசி முடிவுக்கு வந்தனர்.
6. “நம்ம ரெண்டு பேரோட எண்ணமும் ஒரேமாதிரி தான் இருக்கும் என நான் ஏற்கனவே வாங்கிட்டேன்டி, இங்க பாரு எப்படி இருக்குன்னு சொல்லு” என்றபடி ஒரு டப்பாவைத் திறந்தாள் ரமா.
7. அதில் சில்வர் ஸ்ட்ராப் பளபளக்க அட்டைப் பெட்டியில் பெரிய டயலோடு கைகடிகாரம் அழகாக ஜொலித்தது.
8. “ஜோரா இருக்குடி, அப்பா கைக்கு அம்சமா இருக்கும், நேரம் தவறாது நம்மை பார்க்க வரும் அப்பாக்கு இதை விட சிறந்த பரிசு என்ன இருக்க முடியும்” என்றாள் உமா
9. “நா உன்கிட்ட கேக்காம வாங்கிட்டேன்னு கோபம் இல்லல அக்கா” சிலநேரம் இப்படி திடீர் மரியாதை கொடுப்பது இருவருக்கும் வழக்கம்.
10.” என் செல்ல தங்கை, என்னை விட புத்திசாலி சுறுசுறுப்புன்னு தெரியாதா லூசு எனக்கு எந்த கோபமும் இல்லை” என தங்கையை அணைத்தபடி மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு அப்பாவின் வரவை எதிர்பார்த்து சகோதரிகள் காத்திருந்தனர்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
