எழுத்தாளர்: முனைவர் அ.இலங்கேஸ்வரன்
துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றிய பெருமாளுக்குத் தன் மகனை
எப்படியாவது படிக்க வைத்துப் பெரிய ஆளாக்கிப் பார்க்கவேண்டும் என்ற மிகப் பெரிய
கனவு இருந்தது. வேலை செய்த தெருக்களில் வசித்த அனைவரையும் பார்த்து வணங்கிக்
கூன் விழுந்திருந்தது அவருக்கு. அப்பாவின் செயலைக் கண்டு மனம் பொறுக்காத மகன்
கபிலன், அரசின் எழுத்துத் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்து ஆசிரியர் ஆனான். குனிந்தே
கிடந்த பெருமாளின் மகனான அவன், தான் கொடிகட்டிப் பறக்கப் போவதைத் தன்
தந்தையிடம் கூறினான். ஆனால் பணி ஓய்வு பெறும் முன்னரே விச வாயுத் தாக்கி இறந்து
போனத் தன் தந்தையின் மகிழ்ச்சியைப் பார்க்க இயலாமல் கதறி அழுதான்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/