எழுத்தாளர்: சுப்புலட்சுமி சந்திரமௌலி
அப்பா நாமளும் அந்த பலூனில் போகலாமா என்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் செல்வி தன் தந்தை நடேசனிடம் கேட்டாள். அதெல்லாம் பணக்காரர்கள் தான் செல்ல முடியும், நம்மை மாதிரி மீன்பிடிப்பவர்களால் முடியாது என்றான். அப்பா, நான் பெரியவளாகி உன்னை கூட்டி போகிறேன் என்று சபதமிட்டாள் செல்வி. தான் போட்ட சபதத்தில் செல்வி ஜெயித்தாள், ஆனால் அதைப் பார்க்க நடேசன்தான் உயிருடன் இல்லை. சுவற்றில் படத்தில் மாலை தொங்க சிரித்துக் கொண்டிருந்தான்.
முற்றும்.