எழுத்தாளர்: நா. நாகராஜன்
ஹரி கல்லிடைக்குறிச்சி கிராமத்தில் இருந்து வந்தவன். இவனும் பி ஏ ஜேம்ஸ் சும்
சேர்ந்து அடித்த கொ ட்ட ம் கொஞ்ச நஞ்சம் அல்ல. மூன்று நாள் அலுவலகம் விடுப்பு
என்றால் பறந்து கல்கத்தா, டெல்லி என்று போய் விடுவார்கள். இவர்களுக்கு என்று
எப்படிதான் தரக ர் கள் கிடக்கிறார்கள். மலையாள பெண் வேண்டுமா? என்ன வயசு
என்ன ஜாதி வேண்டும் என்று விசாரிப்பார்கள். ஹோட்டல் தரத்துடன் வீட்டில் எல்லா
வசதியும் இருக்குமாம்.
“நீ ஒரு முறை வா சிவா .எத்தனை நாளைக்கு இந்த கிழ மேலாளர், ஐம்பது கடந்த
அம்புஜம் அம்மாளை பார்ப்பது. டெல்லி யில் உன்னை யாருக்கு தெரியும். காதலித்த
அனுபவம் கிடையாது. பெண் வாசனை தெரியாது. இப்போ உள்ள தலைமுறை
காதலே மேட்டர் முடித்த பின் தானாம். யோசி. கொஞ்சம் செலவு.நிறைய சுகம். “
மூன்றாம் நாள் அவர்கள் அலுவலகத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது. தீவிர வாதிகள்
சுட்டதில் இரண்டு தமிழ ர் உட்பட எட்டு பேர் சாவு.ஹரியும், பி ஏ வும் அடக்கம். உடல்
வாங்கி வர அதிகாரி யுடன் சிவாவும் பறந்தான்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
