எழுத்தாளர்: நா.பா.மீரா
தாத்தா ..இந்த அம்மா ரொம்ப மோசம் .எண்ணெய் சாக்லேட் சாப்பிடவே விடமாட்டேங்கிறாங்க …என்று அழுத பேத்தி அட்சயாவை சமாதானப்படுத்தி … கடைத்தெருவுக்கு அழைத்துச் செல்கிறார் சாம்பசிவம்.
சாக்லேட் சூப்பர் தாத்தா ….அவர் கன்னத்தில் முத்தமிட்டுத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறாள் .
பேத்தியின் தலை கோதியவர்..நிதானமாக ….அப்பப்போ சாக்லேட் சாப்பிடலாம் …. தினம் தினம்கிறது …நல்லதுக்கு இல்லைடா கண்ணு …
சுவர் இருந்தாத்தானே சித்திரம் …. பற்களை நல்லாப் பராமரிச்சாத்தானே நமக்குப் பிடிச்சதைச் சாப்பிட முடியும் .
சரியா வாய் கொப்பளிக்காம ….ஈறுகளில் ஒட்டிக்கொள்கிற சாக்லேட் துணுக்குகள் கெட்ட பாக்டீரியாவை உண்டு பண்ணி … தாங்க முடியாம ஈறுகள் பற்களை உதிர்த்திடும் ….
வீடு வந்தவுடன் முதல் காரியமாக நன்கு வாய் கொப்பளித்தாள் அட்சயா.
நன்றி